[adinserter block="6"]

குறிப்பு: இதன் ஆங்கில மூலத்தைக் காண இங்கே செல்லவும். இப்பகுதி இன்னும் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வழங்கப் படுகின்றன. வெறும் மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் ஞானபூமி தளத்தின் அடிநாதத்தை ஒட்டியும் வேத தர்மத்தின் கோட்பாடுகளை ஒட்டியுமே இவை சித்தரிக்கப் படுகின்றன. எக்காரணம் கொண்டும் பிற மதங்களைத் தூற்றுவதோ, அவற்றைப் பின்பற்றுபவர்களை தாழ்த்துவதோ இங்கு செய்யப்படவில்லை. மறுமொழியின் வாயிலாகவும் அவை வரவேற்கப்படமாட்டா. வேதங்களின் மேன்மையையும் அவற்றை நாம் உணர்வது எத்துணை இன்றியமையாயது என்பதை மட்டுமே பறைசாற்றும் ஒரு மிகச்சிறிய முயற்சியே இஃது.

“வேதங்கள் கோமாமிசம் உண்பதை வலியுறுத்துகிறது என்னும் கட்டுக்கதையை ஆதாரத்துடன் நிர்மூலமாக்குவோம். மேலும், அஸ்வமேத யாகம், கோமேத யாகம் என்பனவற்றின் உண்மையில் என்ன என்பதையும் பார்ப்போம், வாருங்கள்!”

வேதச் சொற்களின் மூலத்தை, அவை சொல்லப்பட்டிருக்கும் சூழ்நிலை, அதன் சொல்வளம், இலக்கணம்,  மொழி ஆய்வு, மற்றும் வேத மந்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள இன்றியமையாத இன்னபிற வழிகளைக் கொண்டும் செய்யப்பட்ட மிக ஆழமான, எதிலும் சார்பற்ற ஒரு ஆய்வின் விளைவே இக்கட்டுரை.  மேலும், மேக்ஸ் முல்லர், க்ரிஃப்பித், வில்சன், வில்லியம்ஸ் மற்றும் பல இந்தியவியலாளர்கள் வேதங்களையும் அதன் மொழிகளையும் பற்றிப் படைத்தவைகளைக் கண்ணை மூடிக்கொண்டு மறுபதிவு செய்ததில்லை இத்தொகுப்புகள். அவை மேலைநாட்டுக் கல்வியுலகின் பிரபலமான கருத்துக்களாக இருப்பினும் அவை நம்பத்தகுந்த, ஆதாரபூர்வமானவை அல்ல என்ற நிலைப்பாடு எமக்குண்டு. அது ஏன் என்ற ஆதாரங்களையும் இத்தொகுப்புகளில் காணலாம்.

ஞானத்தின் முதற்புத்தகங்களான வேதங்கள் பற்றிய கட்டுக்கதைகளைத் தகர்த்து உண்மையை ஆராய்ந்தறியும் கட்டுரைத் தொகுப்பின் முதற்பகுதிக்கு தங்களின் நல்வரவு.

பூமியில்  ஞானத்தின் முதல் வழிவகையான, ஹிந்து தர்மத்தின் வேர்களாகிய வேதங்கள் மனித இனம் ஆனந்தமயமான வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகளைச் சொல்வதற்காக ஏற்பட்டது.

நூற்றாண்டுகளாக ஹிந்துக்களின் புனித கிரந்தங்களாகிய வேதங்களில் புனிதமற்ற, தீங்கான கருத்துக்களிருப்பதாக அவதூறு பரப்பப்பட்டது. இக்கருத்துக்களை அப்படியே நம்பத்தொடங்கி விட்டால் ஹிந்து தர்மம், கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியம் இவை காட்டுமிராண்டித்தனம், விலங்கினம் மற்றும் நரமாமிசமுண்ணும் நெறிகள் அன்றி வேறொன்றுமில்லை என எண்ணத் தோன்றும்.

உலகெங்கிலுமுள்ள ஹிந்துக்களை சங்கடப்படுத்தி, அவர்கள் தங்களைத் தாங்களே கீழாக எண்ணச் செய்யும் பொருட்டு இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள்  பல்வேறு தரப்பினரால் பரப்பப்பட்டன. இப்பிரச்சாரங்கள் வேதங்களிலிருந்தே ஆதாரங்களைக் காட்டுவதாய்ப் பீற்றிக் கொண்டன.

இவை ஏழைகள் மற்றும் படிப்பறிவில்லாத இந்தியர்களை அவர்களுடைய தர்மத்தின் ஆதாரமாகிய வேதங்கள் பெண்மையைக் கீழ்த்தரமாக சித்தரிப்பதாயும், பலதாரமணத்தை ஊக்குவிப்பதாயும்,  ஜாதி வெறி பிடித்தவர்களாயும், அனைத்திற்கும் மேலாக பசு மாமிசமுண்ணுபவர்களாயும் காட்ட வெகு வசதியாயிருந்தது. இது அவர்களிடத்தில் வேதங்களின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்ய வெகு செளகரியமாயிருந்தது.

இவை போதாதென்று மிருகங்களைக் கொன்று யாகம் என்ற ஒன்றை செய்பவர்களாயும் சித்தரித்தார்கள். கேலிக் கூத்தாக, பாரதத்திலிருந்து உதித்து, பண்டைய இந்தியாவைப் பற்றி வெகு ஆழமாய்ப் படித்ததாய்ச் சொல்லிக் கொள்ளும் சில அறிவாளிகளும் இந்த மேலைநாட்டு அறிஞர்களின் (?!) கூற்றை ஆதாரமாய்க் காட்டி ஆம், ஆம், வேதங்களில் இவை இருக்க்த்தான் செய்கின்றன என்று மார்தட்டினார்கள்.

வேதங்கள் கோ-மாமிசம் உண்ணுவதையும், பசுவதை செய்வதையும் அனுமதிக்கிறது என்பது ஒரு ஹிந்துவின் ஆத்மாவிற்கே பேரிடியாகும். பசு ரக்ஷணம் என்பது ஹிந்து தர்மத்தின் ஆணிவேராம். இப்படியிருக்கையில் ஆதார ஸ்ருதியான வேதங்களே இவற்றை ஊக்குவிக்கின்றன என்று சொல்லி விட்டு அதிலிருந்து ஆதாரங்களையும் காட்டுவதாய் சொன்னால்? இந்தியன் வெகு எளிதாக குற்றஞ்செய்தவன் போல எண்ணுவான். இவர்களின் பொய்பிரச்சாரத்திற்கு இரையுமாவான்.  இப்படி பல கோடி ஹிந்துக்கள் இப் பொய் பிரச்சாரத்தை அதன் அடிவேரை ஆட்டும் வண்ணம் எதிர்-வாதம் செய்ய இயலாமல், தெரியாமல் மெளனமாக இருக்கிறார்கள், இன்னமும்!!!

இப்பிரச்சாரக் கூட்டம் வெறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு இந்திய மொழியாய்வாளர்களைக் கொண்டது மட்டுமல்ல, ஹிந்துக்களில் ஒரு சாராரே வேதங்களில் சொல்லியிருப்பவையாகக் கண்டதையும் கூறி அவற்றை ஏற்குமாயும் அப்படி ஏற்காதவர் பாதகர்களாவார்கள் என்றும் பசப்பி சமூகத்தில் மெலிவடைந்த பிரிவினரை மிரட்டி  வந்தனர். இந்த புனைச்சுருட்டின் மையமாக மஹிந்தர், உவாத் மற்றும் சாயான் போன்றவர்களின் கருத்துக்களைச் சொல்லலாம், மேலும் தாந்திரிகர்கள் வேதங்களின் பெயரால் தம் புத்தகங்களில் பரப்பியவையும் சேரும்.

நாளடைவில் இப்பொய்கள் நன்கு பரவி மேலைநாட்டு அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மஹிதர், சாயான் போன்றவர்களின் கருத்துக்களை தங்களது அரை வேக்காட்டு சமஸ்க்ருத அறிவைக் கொண்டு மொழிபெயர்த்ததோடு அவற்றை வேதங்களின் மொழிபெயர்ப்பு என்றும் பெயர் கொடுக்கலாயினர்.

ஆனால் இவர்கள் வேதங்களை சரியாகப் புரிந்து கொள்வதற்கும் அறிவதற்கும் முதற்படியாகிய சிக்ஷை (ஒலியியல் அல்லது உச்சரிப்புக் கலை பற்றிய சாஸ்திரம் – phonetics ) , வியாகரணம் (இலக்கணம் – grammar), நிருக்தம் (மொழியியல் அல்லது பாஷாவிலக்கணம் – philology),  நிகந்து (சொல்வளம் – vocabulary), ச்சண்டா (யாப்பிலக்கணம் – prosody), வானியல் அல்லது வானசாஸ்திரம் (astronomy), கல்ப இவைகளைப் பற்றிய அறிவுடையவர்களாக இல்லை.

அக்னிவீர் இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம் வேதங்களின் மீதுள்ள இவ்வகை தூற்றுதலை தெளிவாகவும், ஆதாரத்துடனும் தகர்த்தெறிந்து அவற்றின் பெருமை, ஞானோபதேசங்கள், அதன் தூய்மை – ஹிந்துக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு மனிதருக்கும், ஜாதி, இன, நிற வேறுபாடுகளின்றி அவை காட்டும் நன்னெறிகளை மீண்டும் நிலைநாட்டுவதே!

பகுதி 1 – மிருகங்களிடத்தில் காட்டும் அஹிம்சை

—————–
யஸ்மிந்த் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஜானத:

தத்ர கோ மோஹா கஹ் சோகாஹ் ஏகத்வமனுபச்யத:

யஜுர் வேதம் – 40.7

“எல்லாவற்றிலும் ஆன்மாவைக் காண்பவர் அதன் புறத் தோற்றத்தில் மயக்கமோ துயரமோ அடைவதில்லை, ஏனெனில் அவர் தன்னிலும் அவைகளிடத்திலும் வேறற்ற தன்மையைக் காண்கிறார்”

—————–
அனுமந்தா விஷசீதா நிஹந்தா க்ரயவிக்ரயீ

சம்ஸ்கர்த்தா சோபஹர்த்தா ச கதாகஷ்சேதி காடகா:

மனுஸ்ம்ருதி – 5.51

“மிருக வதையை அனுமதிப்பவரும், மிருகங்களைக் கொல்வதற்காக கொண்டு வருபவரும், வதை செய்பவரும், மாமிசம் விற்பவரும், அதை வாங்குபவரும், அதிலிருந்து உணவுப் பதார்த்தம் செய்பவரும், அதைப் பரிமாறுபவரும், அதை உண்பவரும் கொலைப் பாதகஞ்செய்தவரே”

—————–
ப்ரீஹிமட்டம் யவமட்டமாதோ மாஷமாதோ திலம்

ஈஷா வாம் பாகோ நிஹிதோ ரத்னதேயாய தந்தெள  மா ஹின்சிஷ்டம்

பிதரம் மாதரம் ச

அதர்வ வேதம் – 6.140.2

“ஏ பற்களே! நீங்கள் அரிசியை, வாற்கோதுமையை, பருப்பு வகைகளை, எள்ளை உண்கிறீர்கள்.  இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய் தந்தையராக முடியும் எதையும் கொல்லாதீர்கள்”

—————–
யா ஆமம் மான்ஸமதந்தி பௌருஷேயம் ச யே க்ரவீ:

கர்பான் காதந்தி கேஷவாச்டாநிதோ நாஷயாமசி

அதர்வ வேதம் – 8.6.23

“நாம் சமைத்த இறைச்சி, பச்சை இறைச்சி, ஆண்-பெண் பாலர்களின் அழிவினால் ஏற்பட்ட இறைச்சி, கரு, முட்டை இவைகளை உண்பவர்களை அழிக்க வேண்டும்”

—————–
அனகோ ஹத்யா வை பீம க்ரித்யே

மா நோ காமஷ்வம் புருஷம் வதீ:

அதர்வ வேதம் – 10.1.29

“வெகுளியானவற்றைக் கொல்வது கண்டிப்பாக பெரும் பாவமே. நம் பசுக்களையும், குதிரைகளையும், மக்களையும் கொல்லாதீர்”!

இப்படித் தெளிவாக வேதங்களில் மிருக வதை தடை செய்யப்பட்டிருக்கையில் எவ்வாறு இச்செயல்கள் வேதங்களில் ஊக்குவிக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்கள்?

—————–
அக்ஃன்யா யஜமானஸ்ய பஷூன்பஹி:

யஜுர் வேதம் – 1.1

“ஓ மனிதனே – மிருகங்கள் அக்ஃன்யா – அழிக்கப்படக் கூடாதவை. அவைகளைக் காப்பாயாக”

—————–
பஷுன்ஸ்த்ராயேதாம்

யஜுர் வேதம் – 6.11

“மிருகங்களைக் காப்பீர்”

—————–
த்விபாதவா சதுஷ்பாத்பாஹி

யஜுர் வேதம் – 14.8

“இரண்டு கால், நான்கு கால் ஜீவன்களைக் காப்பீர்”

—————–
க்ரவி த – க்ரவ்ய (மிருக வதை செய்பவரிடமிருந்து பெறப்பட்ட மாமிசம்) + அத (அதை உண்பவர்) – மாம்ஸமுண்பவர்

பிசாசா – பிசித (மாம்ஸம்) + அஸ (உண்பவர்) – மாமிசமுண்பவர்

அசுத்ர்ப – அசு (ப்ராண வாயு) + த்ர்ப (தன்னைத் திருப்தி படுத்திக் கொள்பவர்) – தன் உணவிற்காக பிற உயிர்களைக் கவர்பவர்

கர்ப த & அண்ட த – கரு மற்றும் முட்டைகளை உண்பவர்

மன்ஸ் த – மாமிசம் உண்பவர்கள்

மாமிசம் உண்பவர்களை எப்போதும் கீழானவர்களாகவே பார்க்கிறது வேத இலக்கியங்கள். அவர்களை ராக்ஷசர்கள், பிஷாசர்கள் என்றெல்லாம் அழைக்கிறது. இவர்களை மேம்பட்ட சமுதாய வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே கருதியிருக்கிறது.

—————–
ஊர்ஜம் நோ தேஹி த்விபாதே சதுஷ்பதே

யஜுர் வேதம் – 11.83

“இரு காலுள்ளவையும் நான்கு கால்களுள்ள ஜீவன்களும் பலமும் ஆஹ்ருதியும் பெறட்டும்”

இம்மந்திரம் பெரும்பாலான ஹிந்துக்களால் உணவருந்துவதற்கு முன் சொல்லப்படும். ஒவ்வொரு ஆத்மாவும் எக்கணமும் நலமுற்று வாழப் பிரார்த்திக்கும் தத்துவம் மிருக வதையை எவ்வாறு அங்கீகரிக்கும்?

லோக சமஸ்தா சுகினோ பவந்து – இந்த மந்திரத்தின் அர்த்தம் தெரியுமல்லவா? சமஸ்த என்றால் அனைத்தும் என்றர்த்தம்.

[பாகம் 2] – வேதங்கள் அஹிம்சையையே போற்றுகின்றன!

யஞங்கள் பலரின் விருப்பமான மற்றும் அவர்கள் பிரபலப்படுத்திய நம்பிக்கைப்படி மிருக வதையைக் குறிப்பதில்லை. யக்ஞம் என்ற சொல் வேதங்களில் ஒரு புனிதமான செயல் அல்லது மிகவுயர்ந்த தூய்மைப் படுத்தும் செயல் என்றே குறிக்கப் படுகிறது.

—————–
அத்வர இதி யக்ஞநாம – த்வரதிஹிம்சாகர்மா தத்ப்ரதிஷேத:

நிருக்தம் 2.7

யாஸ்க ஆச்சார்யரின் கூற்றுப்படி, நிருக்தத்தில் (பாஷாவிலக்கணம்) யக்ஞம் என்ற பதத்தின் ஒரு பொருள் அத்வர என்பதாகும். த்வர என்பது ஹிம்சை அல்லது வன்முறை என்றாகும். எனவே அ-த்வர என்பது அ-ஹிம்சை என்பது தெளிவாகிறது. வேதங்களில் பல இடங்களில் அத்வர பிரயோகம் காணக்கிடைக்கிறது.

—————–

மஹாபாரதக் காலத்திற்குப் பின்னர் வேதங்களைத் திரித்துக் கூறுதல் மற்றும் மற்ற புனித நூல்களில் இடைச்செறுகல்கள் பல நடைபெற்றன. சங்கராச்சாரியார் வேதங்களின் மாண்பை ஒருவாறு மறுபடி நிலைநாட்டினார். சமீப காலத்தில் வாழ்ந்த ஸ்வாமி தயானந்த சரஸ்வதி வேதங்களை அவற்றின் வழிமுறைகளுக்கேட்ப, நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் பொருள்படுத்தினார்.  அவருடைய வேதங்களைப் பற்றிய கருத்து, பொழிப்புரை அடங்கிய இலக்கியங்கள் சத்யார்த் ப்ரகாஷ் என்பவரால் “உண்மையின் ஒளி (Light of Truth), வேதங்கள் ஓர் அறிமுகம் (An Introduction to the Vedas) மற்றும் இன்னும் பலவாறாக மொழிபெயர்க்கப்பட்டுப் பல்கிப் பரவி வேத தர்மத்தின் சார்பில் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கியதோடு வேதங்களைப் பற்றிய கட்டுக்கதைகளைத் தவிடுபொடியாக்கியது.

வேதங்கள் யக்ஞங்கள் பற்றி என்ன கூறுகின்றன பார்ப்போம்..

—————–
அக்னே யம் யக்ஞமத்வரம் விஷ்வத: பரி பூரஸி

ச இத் தேவேஷு கச்சதி

ரிக் வேதம் 1.1.4

ஓ ஒளிர்விடும் கடவுளே! நீங்கள் எல்லா திக்குகளிலிருந்தும் போதிக்கும் அஹிம்சை யக்ஞம் அனைவருக்கும் பயனுள்ளதாகிறது, தெய்வீக நிலைகளைத் தொடுகிறது, மேலும் மேம்பட்ட ஆத்மாக்களால் அங்கீகரிக்கப்படுகிறது.

—————–
ரிக் வேதம் யக்ஞம் என்பதை அத்வர (அஹிம்சை) என்றே எங்கும் குறிப்பிடுகிறது. மற்றைய மூன்று வேதங்களிலும் அங்ஙனமே. இவ்வாறிருக்கையில் வேதங்கள் மிருக வதையை ஊக்குவிக்கிறதென்று எவ்வாறு முடிவு செய்யலாம்?

கால்நடை மற்றும் பசு வதை வேதங்களில் இருக்கிறது என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டு அவை தொட்டு வரும் பெயர்களினாலேயே திரிபடைந்து வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு அஸ்வமேத யக்ஞம், கோமேத யக்ஞம், நரமேத யக்ஞம் முதலியன. மிக அதீத கற்பனையிலும் இச்சொற்களில் வழங்கப்பெறும் “மேத” என்பது “பலி” என்பதாக வழங்கப்படமாட்டாது.

யஜுர் வேதம் குதிரையைப் பற்றி என்ன சொல்கிறதென்ற அற்புதமானதொன்றைப் பார்ப்போம்.

——————————————————–

இமம் ம ஹிம்சிரேகாஷஃபம் பஷும் கனிக்ரதம் வாஜிநாம் வாஜிநேஷு

யஜுர் வேதம் – 13.48

“மற்ற பெரும்பாலான அனைத்து மிருகங்களையும் விட அதி விரைவாக ஓடும் ஓர் குளம்பினால் ஆன கனைக்கும் இம்மிருகத்தை வதைக்காதீர்!”

——————————————————–

அஸ்வமேத யக்ஞம் என்றால் குதிரையைப் பலி கொடுக்கும் யக்ஞம் என்று பொருளல்ல! யஜுர் வேதம் மிகத் தெளிவாகக் குதிரையைப் பலி கொடுக்காதீர் (ம) என்று சொல்லி விட்டது.

ஸப்தபாதத்தில் அஷ்வ என்றால் தேசம் அல்லது சாம்ராஜ்யம் என்று பொருள்படும்.

மேத என்றால் வதை அல்ல. அது புத்திக்கு ஏற்றாற்ப்போல செய்யப்படும் ஒரு காரியம் என்றும் ஒருங்கிணைப்பு அல்லது ஆக்கம் என்றும் பொருள் பட ஏதுவாகிறது. இதன் மூல அர்த்தம்: மேத — மேத்ரு சங்-க-மே

ராஷ்டிரம் வா அஷ்வமேதா:
அன்னம் ஹி கெள
அக்னிர்வா அஷ்வா:
ஆஜ்யம் மேதா:
(ஷத்பதம் 13.1.6.3)

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி தன் உண்மையின் ஒளியில் (Light of Truth) கூறுகிறார்:

“ஒரு சாம்ராஜ்யத்தின் / தேசத்தின் பெருமை, நலன் மற்றும் வளத்தை முன்னிறுத்தி செய்யப்படும் யக்ஞத்தின் பெயர் அஷ்வமேத யக்ஞம் எனப்படும்.”

“உணவைப் புனிதமாக வைக்கவும் அல்லது புலன்களை கட்டுப்பாட்டில் வைக்கவும் அல்லது உணவைப் புனிதமாக ஆக்கவும் அல்லது சூரியனின் கதிர்களை நற்பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும், பூமியை அசுத்தத்திலிருந்து காக்கவும் செய்யப்படும் யக்ஞம் கோமேத யக்ஞம் எனப்படும்”

ஞானபூமி — இதில் நம் தமிழ் மொழியில் கோமகன் என்றால் கொற்றவன் / மன்னவன் என்றும் கண்டிருக்கிறோம், கோமகன் என்றால் பசுவின் மகன் என்றா பொருள்படும்? ஒரு வேளை மேதாவிலாசம், மேதை என்ற சொல்லும் மேத என்ற சமஸ்க்ருத சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம். தமிழ் மொழியும் சமஸ்க்ருதமும் ஒன்றையொன்று வார்த்தைப் பிரயோகங்களை கொடுத்து வாங்கியது என்பது மொழியாய்வாளர்களின் கருத்தே –

“கெள என்றால் பூமி, பூமியையும் அதன் சுற்றுச்சூழலையும் காக்கவென்று செய்யப்படும் யக்ஞம் கோமேத யக்ஞம்”
“வேதங்களின் அடிப்படையில் உருவான வழிமுறைகளின் படி இறந்தவரின் உடலை எரியூட்டுவதன் பெயர் நரமேத யக்ஞம்”

[பாகம் 3]வேதங்களில் பசு மாமிசம் (கோமாம்ஸம்) கூறப்படவில்லை

குறிப்பு: இதன் ஆங்கில மூலத்தைக் காண இங்கே செல்லவும். இப்பகுதி இன்னும் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வழங்கப் படுகின்றன. வெறும் மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் ஞானபூமி தளத்தின் அடிநாதத்தை ஒட்டியும் வேத தர்மத்தின் கோட்பாடுகளை ஒட்டியுமே இவை சித்தரிக்கப் படுகின்றன. எக்காரணம் கொண்டும் பிற மதங்களைத் தூற்றுவதோ, அவற்றைப் பின்பற்றுபவர்களை தாழ்த்துவதோ இங்கு செய்யப்படவில்லை. மறுமொழியின் வாயிலாகவும் அவை வரவேற்கப்படமாட்டா. வேதங்களின் மேன்மையையும் அவற்றை நாம் உணர்வது எத்துணை இன்றியமையாயது என்பதை மட்டுமே பறைசாற்றும் ஒரு மிகச்சிறிய முயற்சியே இஃது.

வேதங்களானது மிருக வதைக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, வெகு தீவிரமாக பசுவதையை எதிர்க்கவும் தடை செய்யவும் செய்கிறது. யஜுர் வேதம் பசுவதையை முற்றிலும் தடை செய்கிறது, பசுக்கள் மனிதருக்கு முற்றிலும் சத்துள்ள உணவைத் தருகிறதென்றும் கூறுகிறது.
——————————————————–
க்ருதம் துஹானாமதிதிம் ஜனாயாக்நே மா ஹிம்சிஹி:

யஜுர் வேதம் – 13.49

“பாதுக்காக்கப் படவேண்டிய பசுக்களையும் காளைகளையும் கொல்லாதீர்!”
——————————————————–

ஆரே கோஹா ந்ருஹா வதோ வோ அஸ்து

ரிக் வேதம் – 7.56.17

“ரிக்வேதத்தில் பசுவதை என்பது மாபாதகம் என்றும் மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயலைச் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது”
——————————————————–

 சூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ வயம் பக்வந்த: ஸ்யாம
அத்தி த்ர்நாமாக்ன்யே விஷ்வதாநீம் பிப ஷுத்தமுதகமாசரந்தீ

ரிக் வேதம் 1.164.40 / அதர்வ வேதம் 7.73.11 / அதர்வ வேதம் 9.10.20

அக்ன்ய பசுக்கள் – இவைகளை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது – அவை தாங்களே தங்களை சுத்த ஜலம், பச்சைப் புற்களை உண்டு ஆரோக்கியமாக்கிக் கொள்ளும், இதன் மூலம் நாம் நற்பண்புகள், ஞானம் மற்றும் செல்வம் படைத்தவர்களாவோம்.
——————————————————–

கெள என்ற பதத்திற்கு அர்த்தமாக அக்ன்ய, அஹி, அதிதி என்ற பதங்களையும் நிகண்டு தருகிறார். யஸ்கரும் இதையே –

அக்ன்ய – கொல்லக் கூடாத ஒன்று
அஹி – வதை செய்யக் கூடாத ஒன்று
அதிதி – துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாத ஒன்று

பசுவின் இம்மூன்று பெயர்களும் மிருகவதை கூடாதென்பதை வலியுறுத்துகிறது. இவை வேதங்களில் மீண்டும் மீண்டும் பசுக்களைக் குறிப்பதாய் வருகிறது.
——————————————————–

அக்ன்யேயம் சா வர்ததம் மஹதே செளபாகாய

ரிக் வேதம் – 1.164.27

“பசு – அக்ன்ய – நமக்கு ஆரோக்கியமும் வளமும் கொணர்கிறது”

சுப்ரபாணாம் பவத்வக்ந்யாயா:

ரிக்வேதம் – 5.83.8

“அக்ன்ய பசுவிற்கு சுத்த ஜலம் கிடைக்க மிகச் சிறந்த வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்”

யஹ் பெளருஷேயேன க்ரவிஷா சமன்க்தே யோ அஷ்வேன பஷுநா யாதுதானா:
யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி வ்ரிஷ்சா

ரிக் வேதம் – 10.87.16

“மனித, குதிரை அல்லது மிருகங்களின் சதைகளைப் புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக் கொல்பவர் இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”

விமுச்யத்வமக்ஹ்ன்யா தேவயாநா அகன்மா

யஜுர் வேதம் 12.73

“அக்ன்ய பசுக்கள் மற்றும் காளைகள் உனக்கு வளங்களைக் கொணர்பவை”

மா காமனாகாமாதிதிம் வதிஷ்டா

ரிக் வேதம் 8.101.15

“பசுக்களை கொல்லாதீர். பசு ஒரு வெகுளி மற்றும் அதிதி – அதாவது துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாதது”

அந்தகாய கோஹாதம்

யஜுர் வேதம் – 30.18

“பசுவதை செய்பவர்களை அழி!”

யதி நோ காம் ஹன்சி யத்யஷ்வம் யதி பூருஷம்

தம் த்வா சீசேனா வித்யாமோ யதா நோ சோ அவீரஹ

அதர்வ வேதம் – 1.16.4

“யாரேனும் உங்களின் பசுக்கள், குதிரைகள் அல்லது மக்களை அழிப்பாராயின், அவர்களை ஈயக் குண்டினால் கொன்று விடுங்கள்”

வத்ஸம் ஜாதமிவாக்ன்யா

அதர்வ வேதம் – 3.30.1

பிறரைக் – கொல்லப் படக்கூடாத – ஆக்ன்யப் பசு தன் கன்றுகளை எவ்வாறு நேசிக்குமோ அவ்வாறு நேசியுங்கள்

தேனு சதனம் ரயீநாம்

அதர்வ வேதம் – 11.1.34

பசுவே அனைத்து வளங்களுக்கும் ஆதாரமாம்

ரிக்வேதத்தின் 28 ஆம் சூக்தம் அல்லது 6வது மண்டல ஸ்லோகம் அனைத்தும் பசுவின் பெருமையைப் பாடுகிறது.

ஆ காவோ அக்னமன்னுத பத்ரமக்ரந்த்சீதந்து
ஃபூயோ ஃபூயோ ரயிமிதஸ்ய வர்தயன்னபின்னே
ந தா நஷந்தி ந பதந்தி தஸ்கரோ நாசாமமித்ரோ வ்யதிரா ததர்ஷதி
காவோ பகோ காவ இந்த்ரோ மே அச்சான்
யூயம் காவோ மேதயதா
மா வ ஸ்தேநா ஈஷத மாகன்ஷ:

 

 1. அனைவரும் பசுக்களை தொந்தரவுகளிலிருந்து காத்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
 2. பசுக்களைப் பராமரிப்பவரைக் கடவுள் ஆசிர்வதிக்கிறார்.
 3. பகைவரேயானாலும் பசுக்களின் மீது எந்த ஆயுதப் பிரயோகமும் செய்யலாகாது.
 4. பசு வதை யாரும் செய்யக் கூடாது.
 5. பசு வளமையும் வலிமையும் கொணர்கிறது.
 6. பசுக்கள் ஆரோக்யமாகவும் மகிழ்வுடனுமிருந்தால் ஆண்-பெண்களும் வியாதிகளற்று வளம் பெறுவர்.
 7. பசுக்கள் சுத்தமான் தண்ணீரைப் பருகியும் பச்சைப் புல்லைப் புசித்துமிருக்கட்டும். அவைகளைக் கொல்ல வேண்டா, அவை நமக்கு வளத்தையளிப்பவை.
  —————————————————–

இப்படி பலப் பல இடங்களில் பசு ரக்ஷணம் பற்றியும் பசு வதை கூடாதென்பதையும் வலியுறுத்துகிறது வேதங்கள். பசுக்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும்ம் மிக்க மரியாதையுடனும் குறிக்கப் படுகிறது. படித்தவர்கள் அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். வேதங்கள் உயிர்வதையை, மேலாக பசுவதையையும் மாட்டிறைச்சியையும்  எதிர்க்கிறதென்பதை.

ஆதார நூல்கள்:

1. Rigveda Bhashya – Commentary on Rigveda by Swami Dayanand Saraswati

2.    Yajurveda Bhashya – Commentary on Yajurveda by Swami Dayanand Saraswati

3.    No Beef in Vedas by BD Ukhul

4.    Vedon ka Yatharth Swaroop (True nature of Vedas) by Pt Dharmadeva Vidyavachaspati

5.    All 4 Veda Samhita by Pt Damodar Satvalekar

6.    Pracheen Bharat me Gomamsa – Ek Sameeksha (Beef in Ancient India – an analysis) by Geeta Press, Gorakhpur

7.    The Myth of Holy Cow – by DN Jha

8.    Hymns of Atharvaveda – Griffith

9.    Scared Books of the east – Max Muller

10.    Rigveda translations by Williams/Jones

11.    Sanskrit English Dictionary – Monier Williams

12.    Commentary on Vedas by Dayanand Sansthan

13.    Western Indologists – a study of motives by Pt Bhagvadutt

14.     Satyarth Prakash by Swami Dayanand Saraswati

15.     Introduction to Vedas by Swami Dayanand Saraswati

16.     Cloud over understanding of Vedas by BD Ukhul

17.    Shathpath Brahman

18.     Nirukta – Yaska Acharya

19.     Dhatupath – Panini

இக்கட்டுரையாசிரியர் மேலும் கூறுகிறார்.

 1. இதை எழுதிய பின் எனக்குப் பின்னூட்டங்களாக பலப் பல கருத்துக்கள், வேத ஸ்லோகங்களையும் மனு ஸ்ம்ருதிகளையும் காட்டி அவை பசு மாமிசத்தை காட்டுவதாய்க் கூறின. மனு ஸ்ம்ருதியை பற்றிய ஒழுங்கான கருத்துக்களைப் படிக்க டாக்டர் சுரேந்திர குமாரின் புத்தகத்தைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்:
 1. இவர்கள் கூறும் ஒரு வழக்கமான சாக்கு மான்ச என்பதை மாமிசம் என்று மொழிபெயர்ப்பதே. உண்மையில் மான்ச என்பது ஒரு பழச்சதை, கூழ் என்ற பொதுப் பெயருடன் விளங்குவது. மாமிசத்தை மான்ச என்று சமஸ்க்ருதத்தில் சொல்வது அது கூழாக, சதைப் பற்றாக இருப்பதாலேயே, சதைப்பற்றாக இருப்பவை எல்லாமே மான்ச என்ற பொருளாகாது. அதன் முழு வாக்கியத்தையும் முன்னும் பின்னும் சொல்லப் பட்டிருக்கும் ஸ்லோகங்களையும் வைத்துப் பார்த்தால் அதன் உண்மைப் பொருள் நன்கு புலப்படும்.
 1. இவர்கள் மேலும் சுட்டிக் காட்டுவது ரிக் வேதம் 10/85/13 ஐ. இது சொல்கிறதாம் “ஒரு பெண்ணின் திருமணத்தின் போது பசுக்களும் எருதுகளும் வதை செய்யப்பட்டன” என்று.

உண்மை –  இந்த மந்திரம் சொல்வதென்னவென்றால், பனிகாலத்தில் சூரியனின் கதிர்கள் ஹீனமடைந்து  மறுபடி வசந்தத்தின் போது பலமடைகிறது என்பது. சூரியக் கதிரைக் குறிக்க பயன்படுத்தப் பட்ட சொல், பசுவையும் குறிக்கும் “கோ” என்பது. எனவே பசு என்று எளிதாக மொழிபெயர்த்து விடலாம். ஹீனமடைவதற்கான சொல் “ஹன்யதே” என்பது, அது வதைப்பது என்றும் பொருள்படும். இது இவ்வாறானால், எதற்காக அம்மந்திரம் மேலும் அடுத்த வரியிலேயே “வசந்தத்தில் இவை மீண்டும் தன் சுய ரூபத்தை அடைந்து விடும்” என்று சொல்ல வேண்டும்?

பனிகாலத்தில் வதை செய்யப்பட்ட பசு எவ்வாறு வசந்தத்தில் மீண்டும் உயிர்பெறும்? இதிலிருந்தே தெரியவில்லையா இவர்களது வண்டவாளம்?

மேலும்…

ரிக்வேதம் 6/17/1 – “இந்திரன் பசு, கன்று, குதிரை மற்றும் எருதுகளின் மாமிசத்தை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்” – என்பது.

உண்மை – இம்மந்திரம் “அதிபுத்திசாலிகளாகிய அறிஞர்கள் இவ்வுலகை ஒளிமிக்கதாக்குகிறார்கள், எப்படி யக்ஞத்தின் நெருப்பை மரங்கள் ஒளிபெறச்செய்கின்றனவோ அப்படி” – இதில் இந்திரன், பசு, குதிரை அவைகளின் மாமிசங்கள் இவையெல்லாம் எப்படிப் புகுந்தன என்று வியப்பாயிருக்கிறது!

முடிவாக, வேதங்களில் ஒரு மந்திரமாவது பசுவதையையோ அல்லது பசு இறைச்சி உண்பதை ஊக்குவிப்பதாகவோ இல்லை, இல்லை, இல்லையென்பதே நிரூபணமாகிறது!

This article is translated by Gnanaboomi Team. Original post in English is available at http://agniveer.com/no-beef-in-vedas/

 

[adinserter block="13"]
 • Excellent post sir. With this back up i ll confidently argue with socalled dravidan partians.
  But still one doubt. Meat was not eaten. But is there any killings of animals for yagna.

  I studied somewhere animals killed for yagna and a small amont of (dhall size) brahmin should eat it.

  Is it so.

  Pl clarify.

  • Yes as far as I know. Usually in case of Agni(athiratram) or somayagam where yajamana is also Brahmin, as well as rtwiks (priests) it used to kill goat and part of the meat was kept in hand held in thumps up position (so you know it is so small) and yajamana for sure and perhaps rtwiks ate. Now things are changed. Modern somayaga has substitues for goat’s meat. Btw these (killing) were in practice till mid 20th century not something died out in Budha’s times.

   In some sacrifices like aswamedha I heard that horse is killed. In aswamedha, the rtwiks were Brahmins but yajamana used to be Kshatriya.

   Why goats, horses are killed in sacrifice? Not sure. But trust Vedic rituals ;they are good for society. Some even say that the animal came back to life after sacrifice. Well I cannot digest that

 • PASUKKA KOLLA KUTATHU 4KAAL JEEVANA KOLLA KUTATHUNU SOLREENGA K ATHUKU ATHAARAM ATHARVANA VEATHAM 8:6.23 ,6:140.2 K APA KILLED ANIMALLS IN HINDHUNU ATICHU PARUNGA PASUVA KOLTRATHU NEEGATHA ATHIKAM K YA SUMA VEATHATHA NAMPUROMNU SOLIKITU IPTI PANATHEENGA KYYYYYYYYYYYAAAAAAAAAAA MAKKALUKU NALLA KARUTHA KUTUNGA ILLANA KARUTHEA KUTUKATHENGA PLZZZZZZZ PLZZZZZZZZZZZ PLZZZZZZZZZZZZZZZZZ

 • Excellent exposure of real facts.
  A good blow to twisted minds.
  My Guru Dr.Kashyap has transalated all the 4 vedas to English and recently was awarded VedaBrahma award.
  I am blessed with the task of transalating his books to Tamil.
  Rig Veda first mandala,Yajur Veda kandas 1,2,3,5,6,7 have come out in Tamil.
  Tamil readers should read them to know the inner meanings and message s of Veda
  http://www.vedah.org is the web site of Sri Arabindo Kapali Sastri Institute of Vedic Culture
  TKJagannathan

 • First of all, I would like to thank Agniveer team for publishing this in Tamil language. I find this article very enlighting. Keep up your good work. Hope one day can join you for this noble work. May Ishwar bless you. Nandri .

 • as long as i realize,since agniveer is giving explanation of vadas, and raising slogan of sanatan dharam, why do it mentions sanatan dharm as hinduism ??

 • As per the article’s “NO BEEF IN VEDAS” there are many doublts still remaining,of sack of clarification, non veg is not permitted, then why should human being created with such parts, such pointed teeth, intestine.. secondly, the article shows that the translations of vedas confused as it was’nt translated the actual means. then who was the false translater ?? did he from the scholars of vedas or a normal person who dosent know sanskrit .?

  • to my knowledge we have pointed teeth,intestine so that it certain circumstances to survive we can take meat just because we have pointed teeth,intestine doesnt mean anything there are many vegetarian food which need pointed teeth if you say meat eating is good then we should be killing humans aswell and eating them

   • thank u for reply : we must know 1 thing very certain, is that our life here n hereafter,is to be beneficial.n must know the almighty who created us n did favor upon us, so what ever we as a human like n dislikes are not the way of almighty has shown, coz he has created us and blessed us with his blessing, then he offcourse guided us what are the things which is do – n – donts,

   • so the deeds which we follow must be as per the will of the almighty’s commands alone, so in this manner ignoring the pointed teeths under baseless slogans is not enough. look at tiger cat dog , camel goat cow ox horse they both dosent have both kinds of teeth, but human being have. one can avoid non veg as per his will, but avoid by saying on the name of almighty is not fail at all.

 • Thanks for AGNIVEER TEAM & GNANABOOMI TEAM for this easy reading truthful article.Keep up your noble work.Let us demolish the fanatic brigade in toto.ULTIMATELY OUR HINDUISM WILL PREVAIL IN THIS PLANET!

  • well said i was in tamil nadu for about 6 years and find that message of vedas must reach each and every home specially due to rapid conversion of hindus to christianity by misisonaries and follower of shankracharya limiting study of vedas and sanskrit only to birth based brahmins.

   • Dr . Vivek Arya
    there are so called shudras as not only veda students but part of shankaracharya math.we must not resort to lies to spread the truth.that would be ironical

   • hi @IA brother .. i m too much fan of ur comments in agniveer and satyagni both , i am glad to see you after a long time . keep enlighten me with your knowledge .

    thanks with best regards brother .