UPI - agniveerupi@sbi, agniveer.eazypay@icici
PayPal - [email protected]

Agniveer® is serving Dharma since 2008. This initiative is NO WAY associated with the defence forces scheme launched by Indian Govt in 2022

UPI
agniveerupi@sbi,
agniveer.eazypay@icici

Agniveer® is serving Dharma since 2008. This initiative is NO WAY associated with the defence forces scheme launched by Indian Govt in 2022

நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1

ஆம். நானொரு ஹிந்து என்பதில் மிக மிகப் பெருமிதம் கொள்கிறேன். பெருமிதம் கொள்வதை விட, நான் ஒரு ஹிந்துவாகப் பிறந்ததில் மிக மிக, மிகுந்த அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன்.

நான் ஏன் அவ்வாறு உணரக் கூடாது? கோடி ரூபாயை ஒரு அதிர்ஷ்டப் போட்டியில் ஜெயித்தால் மக்கள் எப்படி பித்துப் பிடித்துப் போவார்கள் மகிழ்ச்சியில்? அவ்வாறிருக்கையில் இப்படி பலப் பல அதிர்ஷ்டப் பரிசுகளைக் காட்டிலும் மிகவுயர்ந்த ஒரு பரிசினைப் பெற்ற நான் பின் ஏன் அவ்வாறு மகிழக் கூடாது? “அவன்” என்னை ஒரு ஹிந்துவாகப் பிறப்பித்து இருக்கையில் எனக்கு அவனிடம் கேட்பதற்கு வேறெதுவும் இல்லை. இந்த மாபெரும் நன்றிக்கடனுக்கு செய்மாறு செய்வதே இனி என் பணி. ஹிந்துத்துவம் எனது மிகப்பெரும் பொக்கிஷமாகும்.

ஓ! என்னைத் தவறாக எண்ணிவிட வேண்டாம். எனக்குப் பிற மதங்களின் பால் எந்தவொரு வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ இல்லை, இல்லவே இல்லை. மாறாக, நான் அவற்றை முழுமையாக மதிக்கிறேன். ஒரு தனிமனிதன் எந்தவொரு மதத்தினையும் இவ்வுலகிலோ பிறவுலகிலோ யார் என்ன சொல்வார்களோ, செய்வார்களோ என்றெல்லாம் கவலையுறாமல் பின்பற்றக்கூடிய சுதந்திரத்தை நான் மிக மதிக்கிறேன். மேலும், நான் மனிதனின் இத்தகைய சுதந்திரத்தைப் பேணுவதற்கு உறுதுணையாகவும் இருப்பேன். இது, இந்த ஹிந்து மதத்தின் தலையாயக் கோட்பாடு தான் நான் ஒரு ஹிந்துவாக இருப்பதில் மிகப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.

அனைத்து தத்துவங்களும், மதக்கோட்பாடுகளும் மிக நல்லவைகளை தன்னகத்தே கொண்டுள்ளன என்பதை மறுபபதற்கில்லை. ஹிந்துமதம் உங்களுக்கு ஏன் மிகச் சிறந்ததாக இருக்கும் என்றும் நான் விவாதிக்க முற்பட மாட்டேன். அது உங்கள் தனிப்பட்ட தேர்வு. நான் இங்கே சொல்ல விழைவதெல்லாம் எனக்கு ஹிந்துமதம் ஏன் ஒரு தனிப்பட்ட விருப்பமாயிருக்கிறது என்பதைப் பற்றியே.

ஹிந்துமதம் (அல்லது) சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்வியல் முறை, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெருமை கொண்டது. நான் ஒரு ஆயிரம் முறை இறக்க நேரிட்டாலும், நான் மறுபடி ஒரு ஹிந்துவாகப் பிறப்பதையே மிகவும் விரும்புவேன். என்னை ஒராயிரம் முறை மதமாற்றம் செய்யும்படி சாவைக் காட்டி பயமுறுத்தினாலும் ஹிந்துமதத்தை விடுவதை விட சாவதையே தேர்வு செய்வேன்.

முதலில் ஹிந்துத்துவம் என்பது ஒரு மதமே அல்ல. அது ஒரு தத்துவமும் அல்ல, கோட்பாடும் அல்ல. மதம், தத்துவம், கோட்பாடு இவைகளெல்லாம் நேரம் சார்ந்த, குறிப்பிட்ட, எல்லைகளுக்குட்பட்டது.

மாறாக, ஹிந்துத்வம் என்பது “மனிதனாக இருப்பதற்கான கொண்டாட்டம்” ஆம். மனிதனாய் இருப்பதை நியாயப்படுத்துவதே ஹிந்துத்வம். மனிதனாய் இருப்பது என்பதன் நேர் அர்த்தம் தான் ஹிந்துத்வம். நான் நான் ஏன் ஒரு ஹிந்து என்று பெருமிதம் கொள்கிறேன் என்பதற்கு ஒரு சில காரணங்களைச் சொல்கிறேன்.

காரணம் 1 – ஹிந்துத்வம் – மிகப் பழமையான ஞானம்

ஹிந்துமதம் என்பது மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான ஞானக் கருவூலமாகும். ஒரு குறுகிய நோக்கில் மக்கள் இதை “ஹிந்து மதம் உலகின் பழமையான மதம்” என்பார்கள். உண்மையில் மதம் என்ற பிரிவில் மக்களைப் பாகுபடுத்தும் வழக்கம் ஏற்படுவதற்கு முன்னரேயே ஹிந்துத்வம் இருந்து வந்திருக்கிறது.

இம்மதத்தின் சாரம் மனித நாகரிகத்தின் அதி உன்னதமான, அற்புதமான வேதங்கள் நான்கில் உள்ளது. (வேதங்கள் எனப்படுபவை நான்கு மட்டுமே ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண என்பன). வேதங்கள் மட்டுமே அறிவியல்பூர்வமான முறையில் பாதுகாக்கப் பட்டுள்ளவை. எப்படியென்றால் ஒரு சிறிய வார்த்தையைக் கூட பிறழச் செய்வதோ, இடைச் செறுகல் செய்வதோ, மாற்றியமைப்பதோ இயலாத ஒரு தனித்துவமான முறையில் பாதுகாக்கப் பட்டவை. மேலும், வரலாற்றில் எங்கும் இவ்வேதங்கள் இவ்வாறு உருவாக்கப்பட்டவை என்ற ஒரு ஆதார கோர்வை காணப்படவில்லை, அதாவது, இவற்றினை இன்னார் இன்ன முறைப்படி தொகுத்தார், ஏற்ப்டுத்தினார் என்ற வகையில். மேலும் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட இம்மந்திரங்கள் இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்கையில் அதற்கு முன்னமேயே இருந்து வந்திருக்கிறது என்று புலனாகியது.

இவ்வேதங்கள் ஹிந்துமதத்தின் ஆணிவேராகும். வேதங்கள் மட்டுமே எவ்வித விவாதத்திற்கும் எதிர்நோக்கப்படும் ஆதாரமாகும். ஒருவர் வேதங்களைப் படிக்கையில் மிகச்சிறந்த ஞானமும், அறிவுசார் கொள்கைகளும், உன்னத வாழ்வியல்களும் எந்த ஒரு நிலப்பரப்பையும் சாராமல், வரலாற்றையும் ஒழுகாமல், கால நிர்ணயமின்றி, ஒரு வகை மக்களுக்காக என்றெல்லாம் இல்லாமல், அனைவருக்கும், எப்போதும், எந்நேரமும் சார்புடையதாகவும், பொருளுடையதாகவும் இருப்பதைக் காணலாம்.

இப்போதைய நவீன யுகத்தில், புதுவித மதங்களின் தோற்றத்திற்குப் பிறகு, தங்களுடையது “மட்டுமே” சிறந்த மதம் என்று நிலைநாட்டுவதற்காக இந்நான்கு வேதங்களைக் குறை கூறவும், குதர்க்கம் கண்டுபிடிப்பதற்கும், தப்பர்த்தம் செய்து கொள்வதற்கும் முனைந்ததால் ஒரு சாமானியனுக்கு எது சரி, எது தவறு, ஹிந்துத்வம், வேதங்கள் இவையெல்லாம் சரியானவை தானா இல்லை இவைகளும் மற்றுமொரு பிதற்றலா என்று பிரித்தாள முடியாமல் தவக்க ஏதுவாகியது.

ஆனால் இவற்றிற்கும் வேதங்களே உதவிக்கு வருகிறது, அதுவே நான் ஹிந்துவாக இருப்பதில் மிகப் பெருமிதம் கொள்ளும் இரண்டாம் காரணமாகிறது.

காரணம் 2 – ஹிந்துத்வம் – ஒரு ஞானம் மிகுந்த வாழ்க்கை முறை

வேதங்களே, ஒருவர் புத்தக ஞானத்தைக் கொண்டு “உண்மையைத்” தேட முயலுதல் கூடாது என்று அறிவுறுத்துகிறது, அது வேதங்கள் சார்ந்த புத்தகங்களாக இருப்பினும் சரி, அவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு நம்புதல் கூடாது. வேதங்கள் சொல்வதென்னவெனில் “வேதங்களின் ஞானமானது ஒருவரின் எண்ணங்களில் ஏற்கனவே இயைந்திருக்கிறது. மனித வாழ்க்கையின் குறிக்கோளே நல்ல செய்கைகள்,  (பொய்ப் பகுத்தறிவு அற்ற) விவேகமான நற்சிந்தனை மற்றும் ஆக்கபூர்வமான உணர்வுகள் கொண்டு இஞ்ஞானத்தை உணர்வது தான். புத்தகங்கள் என்பது இவ்வழியில் உதவுவன மட்டுமே.

உண்மையில் வேதம் என்ற சொல் “வித்” என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது. வித் என்றால் ஞானம் அல்லது அறிவு எனப் பொருள்படும். ஒருக்கால் வேதங்கள் என்பனவற்றை அறவே அழித்து விட்டாலும் கவலையில்லை, ஒருவர் மேற்சொன்ன மூன்று விவேகமான நற்சிந்தனை, நல்ல செய்கை மற்றும் ஆக்கபூர்வமான உணர்வுகளின் பால் கவனம் செலுத்தினால் போதும், சமகாலத்தில் வாழ்ந்து வரும், முன் வாழ்ந்த சான்றோர்கள் கூற்றுகளின் உதவியுடன் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஞானத்தை மறுபடி அடைய முடியும்.

வேதங்கள் நல்லவேளையாக அழிக்கப்படவில்லை, எனவே அவற்றை அறிவதன் மூலம் ஞானமடைவதை சிறிது விரைவாக முயலலாம்.

வேத மந்திரங்கள் அதன் பொருளை உணர்ந்து சொன்னாலும் இல்லையென்றாலும் மருத்துவ, உளவியல் ரீதியாகவும் பயனளிப்பதாய் இருக்கிறது. ஆனால் வேதங்கள் உண்மையை தேடுவோர்க்கும், அதன்படி வாழ முற்படுவோர்க்கும், உண்மையை உணர்ந்தோர்க்கும் வெகு துணையாயிருக்கிறது.

Why-I-am-proud-to-be-Hindu-Part-2

வேதங்கள் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய சூரியன் அல்லது தண்ணீர் போன்றவை. அதிலும் யார் அதனை ஆழ உணருகிறாரோ, அவர் பிறரின் வாழ்வையும் கற்பனைக்கெட்டாத வண்ணம் ஒளிமயமாக்க முடியும்.

வேதங்கள் மற்றும் ஹிந்துத்வம் வலியுறுத்துவது இத்தகைய ஞானத்தை அடைவது மட்டுமே, ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையையோ அல்லது ஒரு குறிப்பிட்ட புத்தகத்தையோ அல்லது புனித-வசனத்தையோ அல்ல!

காரணம் 3 – ஹிந்துத்வம் – நேர்மையான விரிவடைந்த வாழ்க்கை முறை

ஒரு முஸல்மான் ஆனவர் குரானை ஒதுக்கி வைப்பதன் மூலம் முஸல்மான் ஆக முடியாது என நினைக்கிறேன். அதே போல ஒரு கிறிஸ்துவர் பைபிளை நிராகரிப்பதன் மூலம் கிறிஸ்துவராக முடியாது. ஆனால், ஒருவர் ஒரு வேளை தன் சிந்தனை இயல்பிற்கேற்ப, வேதங்களை நிராகரித்தாலும் கூட அவர் ஹிந்துவாக இருக்க முடியும்.

ஒரு ஹிந்துவாக இருப்பதற்கு உங்களுக்கு எந்தக் கோவிலும் தேவாலயமும் தர்ஹாவும் சான்றிதழ் தரத்  தேவையில்லை. நீங்கள் எந்தவொரு புனித வசனத்தையும் படிக்க, ஒப்பிக்கத் தேவையில்லை, நீங்கள் எந்த ஒரு கடவுளையோ அல்லது புனித-புத்தகத்தையோ நம்பத் தேவையில்லை, ஆம், நீங்கள் உங்களளவில் உண்மையுள்ளவராக, நியாயமுள்ளவராக இருத்தல் மட்டுமே போதும்.

ஹிந்துத்வம் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் தனித்துவம் மிக்கவர்கள் என்று திடமாக நம்புகிறது. எனவே நம் தேவைகளும் விருப்பங்களும் கூட மாறுபடுகிறது. எனவே, ஒரு மனிதனை ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைகளை வைத்து எடை போடுவது என்பது அடி முட்டாள்தனம். ஹிந்துத்வத்தின் குறிக்கோள் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையையோ, புத்தகத்தையோ, கடவுளையோ, அவதாரங்களையோ, அல்லது இறைத்தூதர்களையோ வற்புறுத்துவதல்ல. அதன் குறிக்கோள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்திலும் அவரவர் இயல்புக்கேற்ற ஒரு அடிப்படையை ஏற்படுத்துதல் மட்டுமே. நாம் எப்படி குழந்தைகளாக இருக்கையில் வாய்ப்பாட்டும், வாலிப வயதில் அறிவியல் போன்ற துறைகளில் மேற்படிப்பும் படிக்கிறோமோ அதே போல ஹிந்துமதம் வெவ்வேறு வாழ்க்கைக் கட்டத்தில் வெவ்வேறு மனிதருக்கு எது மிகுந்த இயல்பானவொன்றாய் இருக்கிறதோ அதை சர்வ-சுதந்திரத்துடன் பின்பற்றி அதன் மூலம் முன்னேற உற்சாகப் படுத்துகிறது. ஒரு முதிர்ச்சியடைந்த மேற்படிப்பைப் போலவே அனைவரின் தனித்தனி தேவைக்கும் ஏற்ப தேவையானதை வழங்குகிறது. எங்கோ கோடியில் உள்ள கிராமப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால் மாணாக்கர்கள் மறுபடி மறுபடி படித்ததையே மனப்பாடம் செய்யச் சொல்லும் பள்ளி அல்ல ஹிந்துமதம்.

இத்தகைய வேறுபாட்டினை சுதந்திரமாக தேர்வு செய்யவும், பயமின்றி அதில் பயணப்பட்டு நான் என்னை வளர்த்துவதற்கும் ஹிந்துமதம் பரிபூர்ண சுதந்திரம் தருகிற படியால் நான் இஃதை எந்த ஒரு வாழ்வியல் முறை, மதங்களை விடவும் மென்மேலும் மனிதத்தன்மை மிக்கதாய், சுதந்திரமானதாய், நேர்மையானதாய், எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையானதாய் உணருகிறேன்.

காரணம் 4 – ஹிந்துமதம் – உண்மையில் உலகளாவியது

எந்தவொரு மதப் புத்தகமும் ஒரு நிலப்பரப்பைச் சார்ந்தே இருக்கிறது. உதாரணத்திற்கு ஜுடாயிஸம், கிறிஸ்துவம், இஸ்லாம், இவையனைத்தும் மத்திய கிழக்கு நாடுகள் சார்ந்தவையாக உள்ளது. இதன் கதைகள், விழாக்கள், வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் அனைத்துமே அந்நாட்டு முறைப்படியே உள்ளன. இது ஒரு இலக்கியவாதிக்கு தனிச்சுவை அளிப்பதாய் இருப்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஹிந்துமதத்திலும் சில புத்தகங்களுண்டு – புராணங்கள், ராமாயண-மஹாபாரதங்கள் இவை – இவற்றில் ஆழமான இந்தியத் தன்மையிருப்பதைக் காணலாம். பார்க்கப்போனால் இப்புத்தகங்களில் இருக்கும் கருத்தாழமோ, மொழியாழமோ, ஞானமோ காலக்ரமத்தினால் ஏற்பட்ட இடைச்செறுகல்கள் பல இருந்த போதிலும் நாமனைவரும் இந்தியர் என்பதில் வெகு பெருமிதம் கொள்ளத் தக்கதாய் இருக்கிறது, வரலாற்று பூர்வமாக நாம் பெருமைப் படும் விதமாக இவை இருக்கின்றன.

ஆனால் ஹிந்துமதத்தின் சாரமாகிய வேதங்களோ உலகளாவியது, கால-நேர மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. உண்மையில் வேதங்களே உலகளாவிய ஞானத்தின் சாராம்சமாகும். ஆனால் ஒப்பாரில்லாத இன்ன பிற நூல்களாகிய யோக தர்ஷன், ந்யாய சூத்ரம், வைஷேஷிக தர்ஷன், சாங்க்ய தர்ஷன், வேதாந்தம், உபநிஷத், பகவத் கீதை – இன்னும் பலப்பல உண்டு, தமிழில் நம் திருக்குறள் ஒன்று போதாதா? – இவை உலகளவிலுள்ள இலக்கியவாதிகள் மட்டுமன்றி அறிவியலாளர்கள் பலரையும் வியப்பிலாழ்த்தியிருக்கின்றன, தன்பால் ஈர்த்துள்ளன. இவற்றில் எதுவும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைச் சாராமல், இந்தியா, கிழக்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் என்றெல்லாம் இல்லாமல், மேலும் ஒரு பழமை நெடி அடிக்காமல் என்றென்றும் புத்தம் புதியனவாய் இருக்கின்றன. இப்புதுமை என்னை பெருவியப்பில் ஆழ்த்துகிறது, மிகுந்த ஆசையுண்டாக்குகிறது!

இப்புத்தகங்களிலிருக்கும் வாக்கியங்கள் ஆஸ்திரேலியாவிலிருக்கும் ஒருவருக்கு எப்படிப் பொருந்துகிறதோ அதே போல ஆப்பிரிக்காவிலிருப்பவருக்கும் அண்டார்ட்டிகாவிலிருப்பவருக்கும் கூட பொருந்தும். ஹிந்துமதத்தின் மற்றைய புத்தகங்கள் முறையே இவ்வுலகளாவிய உண்மைகளை பிரதிபலிக்கவும், ஒரு குறிப்பிட்ட கால-நேரத்திற்கு உட்பட்டு விளக்கிச் சொல்வதுமாகவே இருக்கின்றன (உதாரணம் – இதிகாசங்கள் இரண்டும்).

காரணம் 5 – ஹிந்துத்வம் – கொள்கையே பெரிதன்றி பரப்புபவர்களல்ல!

ஒரு க்றிஸ்துவர் இயேசுவை நம்பாத வரை க்றிஸ்துவர் என்று அறியப்படுவதில்லை, அதேபோல ஒரு முஸல்மான் நபிகள் (ஸல்) நாயகத்தை இறைவனின் கடைசித் தூதர் என்று நம்பாவிடில் அவர் இஸ்லாமியராக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இவ்விரண்டு வழிகளிலும் எத்தனையோ நற்பண்புகள் காணப்பட்டாலும் ஒருவர் இவற்றைப் பின்பற்ற வேண்டுமானால் அடிப்படையில் இவ்விரு இறைத் தூதர்களையும ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

இவ்வகை நம்பிக்கைகளில் ஒரு ஒழுங்கின்மையைக் கொண்டு வர இத்தகைய நம்பிக்கைகள் பெரிதும் உதவினாலும், இதன் நன்மை-தீமை பற்றிய விவாதத்தில் இறங்கப்போவதில்லை நான்.

ஆனால் என்னைப் பொறுத்த வரை ஹிந்துமதத்தில் ஒரு தனித்துவத்தின் மரியாதையும், அதைக் கொண்டாடும் இயல்பும் வெகு இயல்பானதாய் இருக்கிறது, மேலும் என்னை ஒரு சிறந்தவனாகவும், தனித்துவம் மிக்கவனாகவும் ஏற்றுக் கொள்கிறது. வற்புறுத்தலின் பேரில் எந்தவொரு கருத்தும் திணிக்கப் படுவைதில்லை இங்கு. ஒரு குறிப்பிட்ட நபரின் எழுத்துக்களோ, பேச்சோ, செயல்களோ என்னை கண்மூடித்தனமாய் நம்பச் சொல்வதில்லை. மாறாக, அத்தகைய நபர்களையும் அவர்கள் சொல்வதில் நியாயம், உண்மை இருப்பின் அரவணைத்து கொள்வதாய் உள்ளது.

உண்மையை மட்டுமே வற்புறுத்துவதால் ஹிந்துமதம் எந்தவொரு தனி-மனிதரையும் ஒருங்கேயோ அல்லது கட்டாய தேவையாய் நம்பவோ சொல்வதில்லை. ஆம், நம்மில் பலர் கிருஷ்ணரையும், ராமனையும், ஹனுமனையும், சிவபெருமானையும், காளி-துர்க்கைகளையும் வணங்கலாம். சிலர் ஒரே இஷ்ட தெய்வத்தையும், சிலர் பலரையும், அனைவரையும் வணங்கலாம். பலப்பல கடவுளர்களும், ஏன் சமீப காலதிற்குட்பட்டவர்களையும் (உதாரணம், சந்தோஷி மாதா, சாய் பாபா போன்றோர்). இன்னும் சொல்லப் போனால் ஒரு சிலருக்கு இது ஒரு பணங்காய்ச்சி மரமாகவும் ஆகிவிட்டது, ஒரு புதிய கடவுள், மனிதர் போன்றவரை நிலைநிறுத்தி மக்களை மயக்கிப் பணம் கறக்கும் ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. இருப்பினும், இது ஹிந்து மதத்தின் ஒரு பலவீனமாகப் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஆனால் இது முழுமையானதல்ல. உண்மையில், ஹிந்துமதம் கட்டுக்கோப்பின்றி, வெறுமனே வழிமொழியாமல் சுதந்திரமாக ஒன்றைத் தேர்வு செய்யத் தூண்டுகிறது. ஹிந்துமதத்தைத் தூற்றுபவர்கள் வசதியாக மறப்பது என்னவென்றால் ‘ஹிந்துமதம் ஒன்று மட்டுமே வெறும் கொள்கையை மட்டும் கூட வணங்கச் சொல்வது”. மேலும், சிலையை வணங்குவதாய் குற்றம் சாட்டப்படுபவர்கள் கூட சிலை வணங்குதல் என்பது வெறும் முதற்படி, முடிவென்பது கொள்கை / தத்துவத்தை உணர்வது மட்டுமெ என்று நன்கறிந்தவர்களாகவே உள்ளனர்.

ஹிந்துக்களில் மிகப்பலர் உருவமில்லாக் கடவுளை நம்புபவர்களாக உள்ளனர். பலர் நாஸ்திகவாதிகள். இன்னும் பலரோ வெறும் கொள்கைகளைப் போற்றுபவர்கள் – உதாரணம் – பொறுமை, மன்னிப்பு, சுயக்கட்டுப்பாடு, திருடாமை, புனிதம், புலனடக்கம், ஞானமடைதல், அறிவாலுயர்தல், நேர்மை, அஹிம்சை, புறங்கூறாமை, உண்மை மட்டும் பேசுதல் – போன்றன.

எனவே, உங்களால் எந்தவொரு அவதாரத்தை நம்ப முடியாவிட்டாலும், எந்த கடவுள் தத்துவத்தை ஏற்க முடியாவிட்டாலும் ஹிந்துவாக முடியும். நீங்கள் நேர்மையானவராக இருத்தல் வேண்டும், யாரிடமும் இதற்காக சான்றிதழ் வாங்கி வரத் தேவையில்லை!!

இந்த ஒரு காரணத்தினாலேயே ஹிந்துமதத்தில் மட்டும் பலப்பல மாற்றமூட்டும் இயக்கங்கள் தோன்றின. பலப்பல கல்விச் சாலைகள் இதற்காகவே ஏற்பட்டு அவை மற்ற கல்விச் சாலைகளை விவாதிக்கவும், ஏசவும் செய்தன. ஆனால் இவற்றால் இவர்கள் யாரும் ஹிந்து-அல்ல என்றாகவில்லை. மாறாக, மிக இயற்கையான முறையில் ஹிந்துமதத்தினுள்ளேயே அவர்களின் புகலிடம் அமைந்தன.

ஒருவகையில் சுதந்திரம் என்பது சில சமயம் கட்டவிழ்த்து விட்டது போலாகி, மக்கள் தங்கள் நிலையறியாமல் கொடுமைகள் புரிதல், அடாவடித்தனம் போன்றவைகளை செய்ய ஏதுவானாலும், சுதந்திரம் என்பது பெயர் மாத்திரத்தில் கெடுதல் அல்லவே? சுதந்திரம் என்பது ஒரு பொறுப்புணர்ச்சியுடன் கூடியது என்று நிலைநிறுத்துதல் அவசியமாகிறது, இதுவே நமக்கு சுதந்திரம் என்பதை இன்னமும் அர்த்தமுள்ளதாக்கத் தோன்றுகிறது.

ஹிந்துமதம் இவைகளை புத்தியாலும் விவேகத்தாலும் தீர்க்க விழைகிறது. இதனாலேயே ஹிந்துமதம் என்பது ஒரு நிலையான ஜடப்பொருள் போலல்லாது, எப்போதும் பொங்கி வருவதாயும், எப்போதும் புத்துணர்வுடன் கூடிய மாற்றாகவும் ஆக்குகிறது. இதுவே என்னையும் ஒரு ஹிந்துவாக இருப்பதில் மிகுந்த ஆர்வத்தையும் அன்பையும் அளிக்கவல்லதாய் இருக்கிறது!

 

This translation in Tamil is contributed by Admin- Gnanaboomi. Original post in English is available at http://agniveer.com/why-i-am-proud-to-be-hindu-part-1/ 

இத்தொகுப்பின் ஆங்கில மூலம் காண – http://agniveer.com/why-i-am-proud-to-be-hindu-part-1/

தமிழ் மொழிபெயர்ப்பு – Admin, http://www.gnanaboomi.com

 

Agniveer
Agniveer
Vedic Dharma, honest history, genuine human rights, impactful life hacks, honest social change, fight against terror, and sincere humanism.

6 COMMENTS

  1. Thank you to produce this writing n tamil. Looking forwards many many like this from agniveer. Great job. Hope one day agniveer team able to translate our holly books in tamil language too. Thank you

  2. God means almigty. I belive hindu becze historical says 4000 bc before also called india hindu country. God is our exmple life also avthar any hindu gods living hollines.exmple i am raped 5000 ladys this Socity agree my perscution. No but why ur agree hindus vadas. GOD IS HOLY WITH OUT HOLLINES NEVER SEEN GOD ALMIGTY JESUS only GOD send avathar anybody like JESUS.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
91,924FollowersFollow
0SubscribersSubscribe
Give Aahuti in Yajnaspot_img

Related Articles

Categories